சனி, 29 மே, 2010

ஏழு நாட்களில் கவிதை எழுதுவது எப்படி ..

முதல் நாள் .
இரவு 8 -இல் இருந்து 8 .30 வரை- நிலவை பார் ,
நிலவை மட்டும் பார்.

இரண்டவது நாள் ..
இரவு 10 -இல் இருந்து 10.30 வரை -விண்மீன்களை பார்,
நிலவை உன் கண்கள் தேடும் , அனுமதிக்காதே ,

மூன்றாவது நாள் ..
நள்ளிரவு 12 -இல் இருந்து 12.30 வரை -
கண்ணெதிரே விண்ணை முட்டும் மிக உயர்ந்த ஓர் மரத்தை பார்,
மூளைக்குள் கவிதை முளை விடும் சத்தம் கேட்கும்
நீ செவி கொடுக்காதே .

நான்காம் நாள்,
அதிகாலை 2 -இல் இருந்து 2.30 வரை -
தூரத்தில் தெரியும் வெளிச்ச புள்ளியை பார்,
பைத்தியம் என்பார்கள் கவலை படாதே ,
கவிங்கர்கள் எல்லோரும் பைத்தியம் தான்.

ஐந்தாம் நாள்,
அதிகாலை 4 -இல் இருந்து 4.30 வரை,
படுக்கையில் படுத்து கொண்டே காதை மட்டும் கூர்மையாக்கு ,
குயில்கள் கூடி உன்னை அழைக்கும் பாடி,
போகாதே ஆனால் அழைப்பை மட்டும் கேள்,
முளை விட்ட கவிதை இலை விடும்- எழுதாதே.

ஆறாம் நாள் ,
அதிகாலை 6 -இல் இருந்து 6.30 வரை,
ஆதவனுக்காய் ஆற்றங்கரையில் அமர்ந்திரு,
வருவான் ஞாயிறு தருவான் கவிதை,
வாங்கிக்கொள் ஆனால் வரையாதே.

ஏழாம் நாள்,
மூன்றாவதாய் உனக்குள் ஒரு பார்வை திறந்திருக்கும்,
அதன் மூலம் உலகை பார், அதன் உண்மையை பார்,
பார்வை இழந்தவனை பார்,
பச்சிளம் குழந்தையை பார், பார் பாரை பார்.
மூளைக்குள் பைத்தியம் பிடிக்கும்- இப்போது
நீ பேனாவை பிடி.

திங்கள், 3 மே, 2010

மௌன யுத்தம் !

சொல்லாத காதலால் , செல்லாத உறவாய் நான் !
கோபப்பட வழியின்றி நீ,
மன்னிப்பு கேட்க வார்த்தைகளின்றி நான் !

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நான் மட்டும்

உன் கூட பேசாத நாட்களில்
பூமியை விட்டு நான் மட்டும் தனியே
விலகி போய் விண்வெளியில் மிதக்கிறேன் .

நீ என்னோடு பேசும் நாளில்
மீண்டும் வந்து அடைகிறேன் பூமியில்
உள்ள என் உடலோடு நான்.

சனி, 3 ஏப்ரல், 2010

சானியா மிர்சா


காதல் தீவிரவாதத்தை விட மோசமானது,
பின்னது ஆண்களை மட்டும் முட்டாள் ஆக்கும்,
முன்னது சானியாவையும் பாகிஸ்தானி யாக்கும் .

வியாழன், 1 ஏப்ரல், 2010


சிரிக்கும் சித்திரமே !
வழி நெடுக மலர்கள் எல்லாம்
உன் பாதம் பட ஏங்குதடி !
மிதித்திடு என்னையேனும் இக்கணமே
நான் உந்தன் அடிமையடி !

சனி, 27 மார்ச், 2010

இறந்த காலக் காதல் .

நேற்று வரை நீ சிறப்பாக தெரியவில்லை !
இன்றோ நேர்மாறாக எதுவும் !
ஒன்று மட்டும் தெரிகிறது - நேற்றும் இன்றும்
காதல் மட்டும் நிறம் மாற வில்லை .